மீண்டும் மீண்டுமா? தண்டவாளத்தில் கற்கள்... ரயிலை கவிழ்க்க சதியா?
சென்னை அரக்கோணம் மார்க்கத்தில் சென்னையில் இருந்து பெங்களூரு, கோவை, திருவனந்தபுரம், மும்பை, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விரைவில் ஆனது இயக்கப்பட்டு வருகிறது. மேலும் அரக்கோணம் சென்னை இடையே நாள் ஒன்றுக்கு நூற்றுக்கு மேற்பட்ட மின்சார ரயில்களானது இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றைய முன்தினம் அரக்கோணம் அடுத்த திருவலாங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாள இணைப்புகள் இணையும் இரு வேறு இடங்களில் இணைப்புகளில் உள்ள போல்ட் நெட்டுகளை மர்ம நபர்கள் கழட்டியுள்ளனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சென்னை ஆவடி வழித்தடத்தில் பட்டறை வாக்கம் பகுதியிலும் இணைப்புகளில் ஜல்லிகல் வைக்கப்பட்டுள்ளது.இன்று காலை சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்திலும் இணைப்புகளில் இரும்பு கம்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரக்கோணம்- காஞ்சிபுரம் மார்க்கமாக செங்கல்பட்டு செல்லும் வழித்தடத்தில் தண்டவாள இணைப்பு பகுதியில் ஜல்லிக்கட்டு வைத்து ரயிலை கவிழ்க்க சதித்தமானது நடைபெற்றது தெரிய வந்துள்ளது. இதேபோல் சென்னை அம்பத்தூர் - பட்டரவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் கற்கள் கிடந்தன. ரயில் பாதையை மாற்றும் தண்டவாளங்களின் குறுக்கே அதிகளவில் கிடந்த கற்களை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் தண்டவாள இணைப்பு பகுதிகளை தற்போது மும்முறமாக சோதனை செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கவரைப்பேட்டை ரயில் சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவமும் ரயில் தண்டவாளை இணைப்புகளில் போல்ட் நெட்டுக்கள் கழட்டியதால் நடைபெற்றது. அதுகுறித்து NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சென்னை அரக்கோணம் பரபரப்பாக இருக்கக்கூடிய இந்த வழித்தடத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது ரயில் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


