மக்களவைத் தேர்தலில் பாஜக வென்றால் பங்குச் சந்தை உச்சம் தொடும் – முதலீட்டு நிபுணர் ருசிர் சர்மா !

 
1

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இந்நிலையில், “பங்குச் சந்தை குறித்து சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், இந்தத் தேர்தலில் பாஜக இதுவரையில் அல்லாத அளவில் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்றும் இதனால், அன்றைய தினம் பங்குச் சந்தையும் உச்சம் தொடும்” என்றார்.

இந்நிலையில், பாஜக 250 இடங்களுக்கு குறைவாக வென்றால், பங்குச் சந்தை 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை சரிவைக் காணும் என்று முதலீட்டு நிபுணரும் ராக்பெல்லர் கேபிடல் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் தலைவருமான ருசிர் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “கடந்த ஐந்து ஆண்டுகளில், உள்நாட்டு முதலீட்டாளர்களின் வழியே இந்திய பங்குச் சந்தை நன்கு வளர்ந்துள்ளது. அந்நிய முதலீடு மிகவும் குறைவு. உலகின் மிக விலை உயர்ந்த பங்குச் சந்தையாக இந்தியா பெருமிதம் கொள்கிறது. இதன் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர்.இவ்வாறு கூறினார்.