பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி- ரூ. 10 லட்சம் கோடி இழப்பு!
Oct 8, 2026, 17:42 IST1791461569681
ஆர்பிஐ வட்டி உயர்வு காரணமாக 2-ம் நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சி வீழ்ச்சியடைந்தது.
சென்செக்ஸ் 1,045 புள்ளிகள் சரிந்து 71,593-ல் முடிந்தது. நிஃப்டி 371 புள்ளிகள் சரிந்து 22,232-ல் நிலைபெற்றது. ஒரே நாளில் இந்திய பங்குச்சந்தையில் சுமார் ரூ.10 லட்சம் கோடி சந்தை மதிப்பு இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி உயர்வு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவை முக்கிய காரணங்கள். பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 104 டாலராக உயர்ந்துள்ள நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ₹96.78 ஆக சரிந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.

