ஸ்டெர்லைட் 'காவலர்' காலமானார்

 
ஸ்டெர்லைட் 'காவலர்' காலமானார்

தூத்துக்குடி ஆயுதப்படையில் பணியாற்றி வந்த காவலர் ராஜா (46) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

Image

கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின் போது போலீஸ் வாகனத்தின் மீது ஏறி நின்று துப்பாக்கியால் சுட்ட அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில்15 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.