"4,000 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை"- அமைச்சர் சிவசங்கர் தகவல்

 
bus

"4,000 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

BUS

இந்நிலையில் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழ்நாட்டில் 4,000 புதிய பேருந்துகள் விரைவில் வாங்கப்பட உள்ளன. மாநில அரசின் நிதியில் 2,000 பேருந்துகளும், ஜெர்மன் வங்கி நிதி உதவி மூலம் 2,000 பேருந்துகளும் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Sivasankar

கொரோனா காலத்தில் தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தால் புதிய பேருந்துகள் வாங்க முடியாத நிலை இருந்தது. சமீபத்தில் தொடங்கப்பட்ட 100 பேருந்துகளுடன் மொத்தம் 199 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்றார்.