இன்று முதல் குவாட்டர், ஃபுல் என அனைத்து சரக்குகளுக்கும் ரூ.10 உயர்வு! முழு விலை பட்டியல் இதோ...

 
tasmac

தமிழ்நாடு அரசின் TASMAC நிறுவனம் நவம்பர் 1, 2026 முதல் அமலுக்கு வரும் புதிய MRP விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. 

Image


இதுவரை MRP-க்கு மேல் தனியாக வசூலிக்கப்பட்டு வந்த ரூ.10 பாட்டில் காசு, இனி MRP-யிலேயே சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு பாட்டிலின் விலையும் ரூ.10 மட்டுமே உயர்ந்துள்ளது. பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் அந்த ரூ.10 திரும்பக் கிடைக்கும் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார்.

1. சாதாரண ரகம் (O Range) - 40% விற்பனை ஆகும் ரகம்

- பிராண்டுகள்: BLACK PEARL BRANDY, OLD SECRET XXX RUM, HONIEY DAY BRANDY, OLD MONK DELUX RUM, TOP STAR SPECIAL BRANDY
- குவாட்டர் (180ml): பழைய MRP ரூ.140 + தனி பாட்டில் காசு ரூ.10 = இப்போது புது MRP ரூ.150
- ஹாப் (375ml): பழைய MRP ரூ.280 + ரூ.10 = புது MRP ரூ.290
- *ஃபுல் (750ml): பழைய MRP ரூ.560 + ரூ.10 = புது MRP ரூ.570
- ஏறியது: ரூ.10

2. மீடியம் ரகம் (M Range)

- பிராண்டுகள்: MAGNUS CHOICE VSOP BRANDY, POWER VODKA, TRIPLE CROWN VSOP BRANDY, SNJ NO.1 SUPER STRONG
- குவாட்டர் (180ml): பழைய MRP ரூ.170 + ரூ.10 = புது MRP ரூ.180
- ஃபுல் (750ml): பழைய MRP ரூ.680 + ரூ.10 = புது MRP ரூ.690
- *ஏறியது: ரூ.10

3. பிரீமியம் ரகம் (P Range)

- பிராண்டுகள்: EL CANSO DARK RUM, OLD MONK PREMIUM XXX RUM, BRITISH EMPIRE, BACARDI CLASSIC SUPERIOR RUM, MORPHEUS BLUE XO BRANDY
- குவாட்டர் (180ml): பழைய MRP ரூ.200 + ரூ.10 = புது MRP ரூ.210
- ஃபுல் (750ml): பழைய MRP ரூ.800 + ரூ.10 = புது MRP ரூ.810
- சில உயர்ரக பிராண்டுகள்: KONIGGEN PREMIUM FRENCH BRANDY 1000ml - ரூ.1770, Henry X Special Reserve Brandy XO 1000ml - ரூ.2690, MORPHEUS BLUE XO 750ml - ரூ.1410
- ஏறியது: இதற்கும் ரூ.10 தான்

Image

நவம்பர் 1 முதல்  எந்த ரகமாக இருந்தாலும் சரி, குவாட்டர், ஹாப், ஃபுல் என எந்த அளவாக இருந்தாலும் சரி, ஒரு பாட்டிலுக்கு ரூ.10 மட்டுமே MRP-யில் சேர்ந்துள்ளது. இது புது வரி அல்ல, ஏற்கனவே வசூலித்த பாட்டில் காசை MRP-யில் கொண்டு வந்த நடவடிக்கை தான்!