மே 1 முதல் வெயில் வாட்டி வதைக்கும்... யாரும் வெளியில் செல்லாதீர்கள்
மே 1 முதல் வட தமிழகத்தில் கடும் வெயில் வாட்டி வதைக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மே 1 முதல் வட தமிழ்நாடு, குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதியில் கடும் வெயில் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. உள் தமிழ்நாடு, தென் மற்றும் மேற்கு தமிழ்நாட்டில் மே 1 அல்லது 2 முதல் மழை மீண்டும் தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் வெப்பநிலை 40°C-ஐ கடந்துவிடும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலுரில் ஏற்கனவே பதிவான
42°C அளவு மீண்டும் எட்டப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஆந்திர எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகள் அதிக வெப்பத்தால் அதிகமாக பாதிக்கப்படும். கடலோரத்திற்கு மிகவும் அருகிலுள்ள
பகுதிகளில் மட்டும் வெப்பம் சற்றே குறைவாக இருக்கும். மே 1 முதல் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நேரடி வெயிலில் செல்லாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடை மற்றும் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

