கேரள முதல்வர் பினராயிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

 
1 1

கேரளா மாநிலம், பம்பையில் செப்டம்பர் 20 அன்று நடைபெறவுள்ள திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழா நிகழ்ச்சியான "லோக அய்யப்ப சங்கமம்" நிகழ்வில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டுமென கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கேரள தேவசம் துறை அமைச்சர் வி.என். வாசவன் அவர்கள் சுடிதம் வாயிலாக கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தனர் .

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், "முன்னரே முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழாவில் தான் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளது என்றும் இவ்விழாவில், தமிழ்நாடு அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜனும் பங்கேற்பார்கள்" என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement