ஸ்டாலின் Vs விஜய்: ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்! - வேட்புமனு தாக்கலுடன் களைகட்டும் தேர்தல் களம்!
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) தொடங்குகிறது. இதையொட்டி, அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் சிசிடிவி கேமரா கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. அரசியல் கட்சியினர் அங்கு கூட்டமாக வருவதை தடுக்க பல அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து தொகுதிகளிலும் காலை 11 முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். ஏப்.6-ம் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம். மார்ச் 31 (மகாவீர் ஜெயந்தி), ஏப்.1 (வங்கி விடுமுறை), ஏப்.3 (புனித வெள்ளி), ஏப்.5 (ஞாயிற்றுக்கிழமை) என 4 நாட்கள் விடுமுறை என்பதால், மீதியுள்ள 4 நாட்கள் மட்டுமே மனு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிடும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் ஆகியோர் ஒரே நேரத்தில் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
VIDEO | TN polls: CM MK Stalin files nomination at Kolathur constituency for April 23 polls.
— Press Trust of India (@PTI_News) March 30, 2026
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/2T4KR4QT8K
சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும், தவெக தலைவர் விஜய் வேட்புமனுத் தாக்கல் செய்தார்#Chennai | #TVK | #Vijay | #ElectionWithPT | #Perambur pic.twitter.com/n86CujJoOg
— PttvOnlinenews (@PttvNewsX) March 30, 2026

