"தமிழ்நாட்டின் குரலாக ஸ்டாலின்; இளைஞர்களின் குரலாக உதயநிதி" - கமல் ஹாசன் புகழாரம்

 
tn

நானும், தம்பி திருமாவளவனும் தோள் உரசி களம் கண்டிருக்கிறோம் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான கூட்டணியின்,சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு வாக்கு சேகரித்து, சிதம்பரம் B.முட்லூர் (பரங்கிப்பேட்டை ரோடு ஜங்சன்) பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். 

tn

அப்போது பேசிய அவர், ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது அதனால் தான் நானும் தம்பி திருமாவளவனும் தோளுரசி களம் கண்டிருக்கிறோம்.  எந்த சித்தாந்தமும் மக்களுக்காக தான். மாவோயிஸ்ட், கம்யூனிஸ்ட் ,பெரியாரிஸ்ட்,  அம்பேத்கரிஸ்ட்  அனைத்தும் தேசத்திற்கு  பாதுகாப்பின்மை வரும்போது தோளோடு தோள்  நின்று களம் காண வேண்டும். 

tn

தமிழ்நாட்டின் குரலாக ஸ்டாலின் திகழ்கிறார் .இளைஞர்களின் குரலாக தம்பி உதயநிதி திகழ்கிறார்.  குரல் அற்றவர்களின் குரலாக பெருஞ்சிறுத்தை தம்பி திருமாவளவன் இருக்கிறார். 2009 இல் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார் இவர்.  ஆனால் 2019ல் அப்படியே இறக்கிட்டாங்க. அதற்கு காரணம் என்னவென்றால் வேறுவிதமான டிஜிட்டல் பானை அவர்களின் கைகளில் இருக்கிறது. நம்ம கையில மண்பானை மட்டும் தான் இருக்கு. இங்கு வந்து பேசிய எங்கள் இளவல் தம்பி உதயநிதி , திருமாவளவனை 6 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும் என்று சொன்னார்.  

tn

எனக்கு சமத்துவம் பிடிக்கும் .இவர் தத்துவம் பிடிக்கும். சில சமயங்களில் பேராசையும் பிடிக்கும் . இந்த முறை நீங்கள் எல்லோரும் மனது வைத்து 10 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் இவரை ஜெயிக்க வைத்தால் படித்து பாடம் கற்காத அவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியும்.  சிதம்பரம் தொகுதி மக்களும்,  கூட்டணி கட்சிகளும் இந்தியாவையே சிதம்பரம் நோக்கி திரும்பி பார்க்க செய்ய வேண்டும்.  திருமா ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர் மட்டுமல்ல. பிற்படுத்தப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்டவர்களின்  உரிமைக்காகவும் போராடுகிறவர்.  இது வாக்குறுதி அல்ல. சாட்சி , நான் பார்த்த சாட்சி.  தன்னுடைய தொண்டர்களையும்,  ஏழை எளிய ஒடுக்கப்பட்டவர்களையும் அரசியல் படுத்தி வருகிறார். எதிரிகளையும் ஜனநாயக படுத்த முயன்று கொண்டிருக்கிறார்.  அவருக்கு என் வாழ்த்துக்கள் கலங்கமற்ற என் கருப்பு வைரம் தம்பி திருமாவளவன் அவர்களுக்கு இந்த பானை சின்னத்தில் உங்கள் ஓட்டுகளை பதிவு செய்யுங்கள்.  அரசியலுக்கு , சமையலுக்கு உகந்த பானை இது; சமத்துவத்திற்கு உகந்த பானை இது  என்றார்.