"போதைப்பொருட்களை ஒழிக்க திராணியில்லையேல் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்" - ஈபிஎஸ்

 
ff

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் 2ஆவது நாளாக மானியக் கோரிக்கை விவாதத்தை அதிமுக புறக்கணித்தது. இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அரசு மெத்தனப்போக்காக செயல்படுகிறது; துரிதமாக செயல்பட்டிருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்; கள்ளச்சாராய மரணம் இல்லை என ஆட்சியர் தவறான தகவல் கொடுத்ததால்தான், மருத்துவமனைக்கு வர மக்கள் அலட்சியம் காட்டினர் மருத்துவமனையில் கள்ளச்சாராய விஷமுறிவு ஊசி இல்லை; சிபிஐ விசாரணை செய்தால் மட்டுமே உண்மை வெளியில் வரும்  என்றார். 

tt

அத்துடன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், நேற்று தூத்துக்குடியில் 8 கிலோ மெத்தபெட்டமைன் எனும் போதைப்பொருள் சிக்கியுள்ளதாக வரும் செய்திகள், இந்த விடியா திமுக ஆட்சியில் போதைப்பொருட்கள் புரையோடிப் போயுள்ளதை மெய்ப்பிக்கின்றன.


கள்ளச்சாராயம், கஞ்சா, சிந்தெடிக் போதைப்பொருட்கள்- இவை தான் திரு.  @mkstalin தலைமையிலான விடியா திமுக அரசு தமிழ்நாட்டுக்கு கொடுத்துள்ள புதிய அடையாளங்கள்!

இனியும் இதே மெத்தனத்தில் இந்த விடியா அரசு இருப்பின், கள்ளக்குறிச்சி மரணங்கள் தொடர்கதையாகிவிடும் அவலத்திலே போய் நின்றுவிடும். போதைப்பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க திராணியில்லையேல் திரு. ஸ்டாலின் பதவி விலக வேண்டும்! #Resign_Stalin என்று குறிப்பிட்டுள்ளார்.