எஸ்.டி. கொரியர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

 
tn

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில், அதிமுக, திமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது.  திமுக கூட்டணியில் இ.யூ.மு.லீ. கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொகுதியில் தற்போதைய எம்.பி.யான நவாஸ் கனியே மீண்டும் போட்டி என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது.

tn

இந்நிலையில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனிக்கு சொந்தமான எஸ்.டி. கொரியர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

ed

பம்மல் மற்றும் பல்லாவரத்தில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது. பம்மல் ‘மார்ஸ்' ஓட்டல் உரிமையாளர்களில் ஒருவரான ரியாஸ் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.