எஸ்.எஸ்.ஐ கொலை - 2 சிறார்களுக்கும் 15 நாட்கள் காவல்!!

 
ttn


திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பூமிநாதன் நேற்று முன்தினம் ஆடு திருடும் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சில நாட்களாக ஆடுகள் அப்பகுதிகளில் திருடப்பட்டு சந்தையில் விற்பது வாடிக்கையாகி வந்த நிலையில்.  இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன்,  ஆடு திருடும் கும்பலை கண்டுள்ளார். இதையடுத்து அவர்களை விரட்டி சென்ற போது கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டார்.  

ttn

இதுதொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த கொலை வழக்கில்  4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . இவர்களில் இருவர் சிறுவர்கள் என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மணிகண்டன் என்ற 19 வயது இளைஞர் கீரனூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

எஸ்ஐ பூமிநாதன்

இந்நிலையில் எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில் கைதான 2 சிறார்களுக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது . இரண்டு சிறார்களும் புதுக்கோட்டையில் உள்ள சிறார் நீதிமன்றம் குழுமத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிறார் நீதி குழு நீதிபதி அறிவு உத்தரவை அடுத்து,  இருவரும் திருச்சி சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரண்டு சிறுவர்களும் புதுகையை சேர்ந்த 5 மற்றும் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.