திருடர்களை பிடிக்க முயன்ற எஸ்எஸ்ஐ வெட்டிப் படுகொலை!!

 
ssi

திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு  உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பூமிநாதன். இவர் அப்பகுதியில் நீண்ட நாட்களாக நடந்து வந்த ஆடு திருட்டை தடுக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி நேற்றிரவு ஆடு திருடர்களை விரட்டிச்சென்று மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே பிடிக்க முயன்றுள்ளார். 

murder

ஆனால் திருடர்களை பிடிக்க சென்ற எஸ்எஸ்ஐ பூமிநாதன் திருட்டு கும்பலால் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சிறப்பு உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்ற கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டனர்.  

murder

மேலும் காவல் அதிகாரி பூமிநாதன் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  அத்துடன் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை  படுகொலை செய்த கும்பலை பிடிக்க  2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.