மதுபோதையில் காரை ஒட்டி சென்று விபத்து ஏற்படுத்திய SSI- இருவர் உயிரிழப்பு

 
ச் ச்

கடலூர் அருகே மது போதையில் காவலர்கள் ஓட்டிச் சென்ற கார் சாலை ஓரத்தில் நின்றவர்கள் மீது மோதியதில் கூலித் தொழிலாளிகள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

கடலூர் முதுநகர் அடுத்த அன்னவெளி அருந்ததிய நகரை சேர்ந்த வடிவேல், பாஸ்கர், ஜெயராஜ் ஆகிய மூவரும் கட்டிட வேலை பார்த்து வருபவர்கள் தங்கள் வேலையை முடித்துவிட்டு மாலை அன்னவெளி பேருந்து நிலையம் அருகே உள்ள ஓட்டலில் நின்று அவர்களது சம்பள பணத்தை பிரித்துக் கொண்டு இருந்தனர். இது தவிர அங்கு அந்த பகுதியை சேர்ந்தவர்களும் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது கடலூர் எஸ்பி அலுவலகத்திற்கு கூட்டத்திற்காக வந்த ஆவினங்குடி காவல் நிலைய சிறப்பு காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் காவலர் இமாம் உசேன் ஆகியோர் கூட்டத்தை முடித்துக் கொண்டு புதுவைக்குச் சென்று மது அருந்தி உள்ளனர். பின்னர் மது அருந்திய தோடு கடலூரில் இருந்து திட்டக்குடி நோக்கி அன்னவெளி அருகே மது போதைகள் தாறுமாறாக காரை ஓட்டிய நிலையில் சாலை ஓரம் இருந்தவர்கள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் வடிவேல் மற்றும் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

காரை ஆவினங் ஆவினங்குடி போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்  ராஜேந்திரன் ஓட்டி வந்தார். அவருடன் போலீஸ் இமாம் உசேன் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த பகுதி மக்கள் ஆத்திரமடைந்து காரை ஓட்டி வந்த இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய இருவரையும் கைது செய்ததுடன் அவர்கள் ஓட்டி வந்த காரையும் பறிமுதல் செய்து கடலூர் முதுநகர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். காவலர்கள் மது போதையில் ஒட்டி வந்த கார் மோதி இரண்டு கூலி தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.