ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் - அமைச்சர்கள் பங்கேற்பு!

 
ttn

ஆடிப்பூர திருவிழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

tn

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பெரியாழ்வார்,  ஆண்டாள் என இரண்டு ஆழ்வார்கள் அவதரித்த பெருமைக்குரிய திருத்தலம் ஆகும்.  இங்கு ஆண்டாள அவதரித்த திருநாளான ஆடிப்பூரத்தில் தேரோட்டம் சிறப்பாக நடைபெறும்.  இதற்காக கடந்த ஜூன் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. 

ttn

இந்நிலையில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர்ஆர், தங்கம் தென்னரசு ஆகியோர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் இன்று காலை 9:05 மணிக்கு நடைபெற்றது. ஆண்டாள் , ரங்க மன்னார் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.கடந்த 2ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்தாண்டு மீண்டும் களைகட்டியுள்ளது. 

tn

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிபுர தேர் தேரோட்ட விழாவையொட்டி இன்று விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வருகிற ஆகஸ்ட் 13ஆம் தேதி பணிநாளாக செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.