“அப்படி ஒரு சம்பவமே நடக்கல..”- ஸ்ரீவைகுண்டம் பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்

 
s

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை வேலை வாங்கித் தருவதாக கூறி தவெக நிர்வாகிகள் அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக செய்திகள் வெளியான நிலையில், பாலியல் துன்புறுத்தல் எதுவும் நடக்கவில்லை என பாலியல் புகார் அளித்த வருடம் சென்ற பெண் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே வசிக்கும் 2 பெண்களுக்கு தவெக நிர்வாகிகள் பாலியல் துன்புறுத்தல் அளித்தாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் அளித்த புகாரின் பேரில் தவெக நிர்வாகி பாலா, ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக புகார் அளித்த பெண்ணுடன் சேர்ந்து சென்றதாக கூறப்படும் பெண் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “விஜயை பார்க்க அழைத்து சென்றது உண்மைதான், ஆனால் பாலியல் துன்புறுத்தல் எதுவும் நடக்கவில்லை. இசக்கியம்மாள் என்பவர் எனது பெயரை தவறாக பயன்படுத்தி வருவதால் மிகுந்த மன வேதனையில் உள்ளேன். தவறு நடந்ததாக கூறினால் அரசு வேலை மற்றும் நிறைய பணம் வாங்கி தருவதாக இசக்கியம்மாள் கூறினார்” எனக் கூறியுள்ளார்.