பேருந்தில் சென்ற 11ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு!

 
tn

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 11ம் வகுப்பு மாணவனை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தேவேந்திரன் என்ற மாணவன் வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதற்காக பேருந்தில் பயணம் செய்துள்ளனர். கெட்டியம்மாள்புரத்தில் பேருந்தை மறித்த 3 பேர் மாணவர் தேவேந்திரனை இழுத்து வெளியில் போட்டுள்ளனர். பின்னர் கையில் வைத்திருந்த அரிவாளால் தேவேந்திரனை சரமாரியாக வெட்டினர். பயணிகள் சத்தம்போட்டதால் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. 

வெட்டுக்காயங்களுடன் கிடந்த மாணவரை சக பயணிகள் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மாணவன் தேவேந்திரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்தை வழிமறித்து 11ம் வகுப்பு மாணவனை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.