“ஊழல் செய்தால் மரண தண்டனை கொடுங்க”- CM விஜய்க்கு ஸ்ரீதர் வேம்பு பரிந்துரை
சிங்கப்பூர் போன்ற கடுமையான சட்டங்களை தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும் என ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு CM விஜய்க்கு பரிந்துரைத்துள்ளார்.
One of the suggestions I have for our Honourable Chief Minister Joseph Vijay is to consider Singapore like laws on drug dealing and high level corruption.
— Sridhar Vembu (@svembu) August 23, 2026
Singapore awards the death penalty for drug dealing and for high level corruption. They do enforce these laws.
In the…
இதுதொடர்பாக ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் தளத்தில், "நமது மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நான் கூறும் ஆலோசனைகளில் ஒன்று,
போதைப்பொருள் கடத்தல், உயர்மட்ட ஊழலுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். சிங்கப்பூர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் உயர் மட்ட ஊழலுக்கு மரண தண்டனை வழங்குகிறது. அவர்கள் இந்தச் சட்டங்களை அமல்படுத்துகிறார்கள். சிங்கப்பூர் நீதிமன்றங்கள் மிகவும் திறமையானவை, நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.
அமைச்சர்கள், IAS, IPS அதிகாரிகளின் ஊதியத்தை கணிசமாக உயர்த்த வேண்டும். கடந்த கால ஊழல்களுக்கு மன்னிப்பு வழங்கலாம். எதிர்காலத்தில் நிகழும் எந்தவொரு ஊழலுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். ஆனால், எதிர்கால ஊழலுக்கு கடுமையான தண்டனை அவசியம். லீ குவான் யூவின் அணுகுமுறையை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் " எனக் குறிப்பிட்டுள்ளார்.

