ஸ்ரீரங்கம் கோயில் அருகே பட்டப்பகலில் நடந்த படுகொலை!

 
murder

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் அருகே பட்டப்பகலில் இளைஞர் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த அன்பு வழக்கம் போல் வீட்டின் அருகில் உள்ள ஜிம்முக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். இந்த நிலையில், திடீரென அன்புவை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல், அரிவாள் மற்றும் பட்ட கத்தியால் அன்புவை சரமாரியாக வெட்டியது. இதிலிருந்து அன்பு தப்பிக்க முயன்ற போதிலும் அவரால் அங்கிருந்து செல்ல முடியாத நிலையில், அந்த கும்பல் சரமாரியாக வெட்டி அன்புவை கொலை செய்தது. பின்னர் அங்கிருந்து 6 பேர் கொண்ட கும்பலும் தப்பிச் சென்றது. 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட அன்புவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்ரீரங்கம் கோயில் அருகே பட்டப்பகலில் இளைஞர் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.