அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு திடீர் நெஞ்சுவலி...பயணிகள் தப்பினர்!
ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு பேருந்து ஓட்டுநர் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நோக்கி அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பேருந்தை ஓட்டுநர் ஸ்ரீதர் இயக்கினார். இந்த நிலையில், ஓட்டுநர் ஸ்ரீதருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதன் காரணமாக ஸ்ரீதர் உடனடியாக பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தினார். ஓட்டுநர் நெஞ்சு வலியால் துடிப்பதை பார்த்தை நடத்துனர் மற்றும் பயணிகள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த ஓட்டுநரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நெஞ்சு வலி ஏற்பட்டு உயிர் பிரியும் நேரத்திலும் 20 பயணிகளின் காப்பாற்றிய ஓட்டுநர் ஸ்ரீதரின் செயல் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.