வெற்றி கொண்டாட்டத்தில் தவெக ஸ்ரீநாத்!
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் ஸ்ரீநாத் முன்னிலை பெற்றுள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தினர் நடிகர் ஸ்ரீநாத்தை தூக்கி உற்சாக கொண்டாட்டம் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

வெற்றி கொண்டாட்டத்தில் தவெக ஸ்ரீநாத்! | Thandora Tamilan#thandoratamilan #AssemblyElection #AssemblyElectionResult #AssemblyElectionResult2026 #dmk #admk #tvk pic.twitter.com/H87g5fIHPT
— Thandora Tamilan/தண்டோரா தமிழன் (@ThandoraTamilan) May 4, 2026
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடிகர் ஸ்ரீநாத் போட்டியிட்டார். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஸ்ரீநாத் தொடர்ந்து சுமார் 25,000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தினர் தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் நடிகர் ஸ்ரீநாத் தங்கி உள்ள தனியார் விடுதிக்கு சென்ற தமிழக வெற்றி கழகத்தினர் நடிகர் ஸ்ரீநாத்தை கட்டியணைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தினர் ஸ்ரீநாத்தை தங்கள் தோள்களில் தூக்கி தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தி வெற்றியை உற்சாகமாக வெற்றிகரமாக கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

