"என் வயிறு எரியுது… இதுக்கா என் குழந்தைய கஷ்டப்பட்டு வளர்த்தேன்"… கதறி அழுத ஸ்ரீமதியின் தாய்

 
tn

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி கடந்த  2022 ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி பள்ளியில்  மர்மமான முறையில் உயிரிழந்தார் . சின்ன சேலம் கன்னியாகுமரியில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளி விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து ஸ்ரீமதியின் மரணம் குறித்து அவரது தாய் செல்வி சின்ன சேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில்,  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  இதன் அடிப்படையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார்,  செயலாளர் சாந்தி,  முதல்வர் சிவசங்கரன்,  ஆசிரியர்கள் ஹரிப்பிரியா , கீர்த்திகா ஆகிய போலீசார் கைது செய்தனர்.  ஸ்ரீமதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.  இந்த வழக்கில் சுமார் 1200 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிகையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்தது. 

gn

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் கீர்த்திகா , ஹரிப்பிரியா ஆகியோரை குற்றப்பத்திரிகை அடிப்படையில் வழக்கிலிருந்து நீக்கம் செய்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து ஸ்ரீமதியின் தாயார் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த மனு கடந்த 16ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற நிலையில் வழக்கினை மே 14ஆம் தேதி ஒத்திவைத்தி  நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.  இந்த வழக்கில் தொடர்புடைய பள்ளி தாளாளர் ரவிக்குமார்,  செயலாளர் சாந்தி,  முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.



இந்நிலையில் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல்  நீதிமன்றத்தில் ஸ்ரீமதி படித்த பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர், முதல்வர் ஆகியோர் ஆஜராகினர். அப்போது அவர்களை பார்த்து ஸ்ரீமதியின் தாயார் என் வயிறு எரிது இதுக்காகவா என் குழந்தையை கஷ்டப்பட்டு வளர்த்தேன் என்று மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதார். நீதிமன்ற வளாகத்தில் ஸ்ரீமதியின் தாயார் அழுத காட்சி அங்கிருந்தவர்களின் நிலைகுலைய  செய்தது.