தமிழ்நாடு மீனவர்கள் 13 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்!

 
fishermen

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 13 பேரை விசைப்படகுடன் சிறை பிடித்தது இலங்கை கடற்படை

தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டுடன் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து வருவது வழக்கம். அப்படி மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் கைது செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. விசைப்படகுடன் மீனவர்கள் 13 பேரையும் இலங்கை கடற்படை சிறை பிடித்தது.
 
தொடர்ச்சியாக இலங்கை கடற்படை கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதனால் மீனவர்கள் தங்களுடைய வாழ்வாதார பாதிக்கப்பட்டு வருவதாக மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.