பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீதேவா நள்ளிரவில் கைது..?

 
Q Q

சிறகடிக்க ஆசை தொடரில் மனோஜ் என்ற ரோலில் நடித்து வரும் நடிகர் ஸ்ரீதேவா இன்ஸ்டாவில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

 

நடிகர் ஸ்ரீதேவா போலீசிடம் திமிராக பேசியதால் அவரை கைது செய்து ஜீப்பில் அழைத்து செல்கிறார்கள். அதை அருகில் இருப்பவர் வீடியோ எடுத்து வெளியிட்டது போல அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர்.இது நிஜமாக நடந்த சம்பவமா? அல்லது இதுவும் சூட்டிங் வீடியோவா என்று ஸ்ரீதேவா அதில் குறிப்பிடவில்லை.

இது குறித்து ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவில் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். என்னாச்சு இது ரீலா? அல்லது ரியலா? என்று கேட்டு வருகிறார்கள். ஆனால் அது ரியல் இல்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. உள்ளிருக்கும் சில போலீஸ் உடை அணிந்தவர்கள் சிரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஸ்ரீ தேவாவும் இப்படி தெருவில் இருக்கும் போலீஸ்காரர்களிடம் சென்று விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் இவர் வழக்கம் போல பிராங்க் பண்ணுகிறார் பிரண்ட்ஸ் என்று கமெண்ட்கள் குவிகிறது.

அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இதை பார்த்தாலே சீரியல் ஷூட்டிங் என அப்பட்டமாக தெரிகிறது என நடிகர் ஸ்ரீதேவாவா ட்ரோல் செய்து வருகின்றனர்.