வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்

 
fisher

நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

fisher

இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடாத்தியுள்ளனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 3 மீனவர்களை தாக்கி, படகில் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி, பேட்டரி, செல்ஃபோன், 20 லிட்டர் டீசலை கொள்ளையடித்துச் சென்றனர்.

fishing


முன்னதாக வேதாரண்யம் மீனவர்கள் ஏற்கனவே நேற்று மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.  ஆறுகாட்டுத்துறைக்கு மிக அருகில் இந்திய கடல் எல்லைப் பகுதியில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியும், இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டை ஆகியவற்றால் தாக்கி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 11 மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.பாஸ்கர் என்ற மீனவரின் மண்டை பிளந்து 21 தையல் போடப்பட்டுள்ளது. 5 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி கருவிகளையும், மீன்களையும் கொள்ளையடித்த நிலையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.