தமிழ்நாடு மீனவர்கள் 17 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை!

 
fisher

தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான மீனவ கிராமங்களும் , லட்சக்கணக்கான மீனவர்களும் வாழ்ந்து வருகின்றனர் . மீன்பிடித் தொழிலை இவர்கள் செய்து வரும் நிலையில் இலங்கை கடற்படையால்  பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். தமிழக மீனவர்களை கைது செய்வதுடன் அவர்களின் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்து செய்கின்றனர்.

fisher

கடந்த மூன்றாம் தேதி ராமேஸ்வரம் தங்கச்சி மடத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 23 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய இரண்டு நவீன மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

arrest

இந்நிலையில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை 2 விசைப்படகுகளுடன், தமிழ்நாடு மீனவர்கள் 17 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை. ஏற்கனவே 23 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் 17 மீனவர்கள் கைதாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.