தமிழக மீனவர்கள் 16 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..
Sun, 12 Mar 20231678587761597

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த பதினாறு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 16 மீனவர்களையும் கைது செய்ததுடன் அவர்களது மீன்பிடி படகையும் பறிமுதல் செய்து இருக்கிறது இலங்கை கடற்படை. கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.