தமிழக மீனவர்கள் 40 பேரை விடுவித்தது இலங்கை அரசு!!

 
fisher

பிரதமர் நரேந்திர மோடி நாளை ராமேஸ்வரத்திற்கு செல்கிறார்.  இதன் காரணமாக பிரதமரின் அலுவலகத்தின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் சிறைகளில் உள்ள நாகை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 40 மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்ய முடிவு எடுத்ததாக தகவல்கள் வெளியாகின.

modi

அத்துடன் இந்திய தூதரக வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் ஆஜராகி சிறையில் உள்ள 40 மீனவர்களை விடுதலை செய்ய மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது.

fisher
இந்நிலையில்  இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 22 பேர், பாம்பன் மீனவர்கள் 18 பேர் என மொத்தம் 40 மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.