மிரட்டும் ஸ்பை திரில்லர்... கார்த்தியின் ‘சர்தார் 2’ ட்ரெய்லர் வெளியானது..!

 
1

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ‘சர்தார்’ படத்தின் இரண்டாவது பாகமாக வரும் இந்த ஆக் ஷன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தமிழ் படம் செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகிறது.இந்த சர்தார் 2 படத்தின் மூலம் சாம் சி.எஸ் இசையமைப்பாளராக தனது 100-வது படம் என்ற ஒரு முக்கிய மைல்கல்லை அடைந்துள்ளார்.

கார்த்தி நடித்து இந்த வருடப் பொங்கலுக்கு வெளிவந்த "வா வாத்தியார் "படம் படுதோல்வி அடைந்தது. இதனால், "சர்தார் 2" படத்தையும் உடனே வெளியிடவில்லை. தற்போது செப்டம்பர் 10ம் தேதியன்று படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். இப்படத்தின் முதல் பாகமான "சர்தார்" படம் 2022ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.