வண்ணப்பொடிகளை தூவி உற்சாகம்.. தமிழகத்தில் களைகட்டிய ஹோலிப் பண்டிக்கை..

 
வண்ணப்பொடிகளை தூவி உற்சாகம்..  தமிழகத்தில் களைகட்டிய ஹோலிப் பண்டிக்கை..


தமிழ்நாட்டில் இன்று ஹோலிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.  சென்னை சௌவுகார்பேட்டை பகுதியில் வட மாநிலத்தவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

வட இந்தியர்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஹோலி. இந்த நாளில் வண்ணப்பொடிகளை ஒருவர் முகத்தில் ஒருவர் பூசி , மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வர்..  பனிக்காலத்திற்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு,  வெயில் காலத்தை வெல்கம் செய்வதற்காக இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.  அதேபோல் ஹோலிப் பண்டிகைக்கு சில புராண காரணங்களும் சொல்லப்படுவதுண்டு..  கிருஷ்ணர், தனது தோழி ராதா மீது வண்ணப் பொடிகளை தூவி விளையாடியதும் ஹோலி பண்டிகை கொண்டாட காரணம்.. ஏழை - பணக்காரர் பாகுபாடின்றி வானவில் வண்ணங்களான சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், ஊதா போன்ற வண்ணப்பொடிகளை பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர்.

வண்ணப்பொடிகளை தூவி உற்சாகம்..  தமிழகத்தில் களைகட்டிய ஹோலிப் பண்டிக்கை..

மகளிர் தினமும் , ஹோலிப்பண்டிகையும் ஒரே நாளில் வருகிறது.  அந்தவகையில்   ஹோலி பண்டிகையையொட்டி சென்னை சௌவுகார்பேட்டை பகுதியில் வட மாநிலத்தவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அதன்படி ஒருவருக்கொருவர் வண்ண பொடிகள் பூசி, உற்சாக நடனமாடி ஆடல் பாடலுடன் கொண்டாடி வருகின்றனர்.  தமிழகத்தில் வட மாநிலத்தவர்க அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஹோலி பண்டிகை களைகட்டியுள்ளது.