மீனவர்கள் வாழ்வில் வசந்தம்! குமரியில் முதல்வர் வெளியிட்ட அந்த 6 'மெகா' அறிவிப்புகள் என்னென்ன?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தும், பல்வேறு துறைகளின் சார்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்பின்னர் முதல்-அமைச்சர் வெளியிட்ட 6 புதிய அறிவிப்புகள்:-
1. குடிநீர் தேவைகளை நிறைவு செய்ய, பழையாற்றில் இருந்து கூடுதல் நீர் வழங்க ரூ.28.20 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம். ரூ.25 கோடி மதிப்பில் ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்.
2. குளச்சல் நகராட்சி மற்றும் மண்டைக்காடு பேரூராட்சியில் AVM கால்வாய் ரூ.1.20 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
3. களியக்காவிளை - குமரி சாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் ரூ.9 கோடியில் சாலை அகலப்படுத்தப்படும்.
4 கல்குளம் வட்டம் தூய மரியா பசிலிக்கா தேவாலயம் ரூ.2 கோடி செலவில் பழமை மாறாமல் சீரமைக்கப்படும்.
5 மீனவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வருகின்ற கல்வி, திருமண உதவி தொகைகள் உள்ளிட்ட அனைத்தும் உயர்த்தி வழங்கப்படும். விரைவில் அரசாணை வெளியிடப்படும்.
6 கடலில் மீன் பிடிக்கும்போது மீனவர்கள் காணாமல் போகும் நேரத்தில் காப்பீடு, நிவாரணங்கள் கிடைக்கும் வரை, அவரது வாரிசுதாரருக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும்.

