ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் கைது

 
tn

அம்பேத்கர், திருவள்ளுவர் ஆகியோரை இழிவுபடுத்திப் பேசிய வழக்கில், ஆன்மிக சொற்பொழிவாளர் RBVS மணியன்  கைது செய்யப்பட்டுள்ளார்.

tn
இது குறித்து அவர் பேசியதாக வெளியான வீடியோவில் , அம்பேத்கர் தான் கான்ஸ்டிடியூஷனை கொடுத்தான்னு  எழுதிக்கிட்டு இருக்காங்க ,பேசிகிட்டு இருக்காங்க, இப்ப இருக்கிற ஆட்சி காரணனும் இதையே சொல்லிக்கிட்டு இருக்கிறான். துதி பாடிக்கிட்டு இருக்கிறான். அரசியல் சட்டத்தை உருவாக்கியது யாருன்னு சேர்மன் பெயரை போட்டால் ராஜேந்திர பிரசாத் பேரை தான் போடணும்.  அங்கு கிளருக்காக வேலை பார்த்தவன், டைப் அடித்தவன் ,டைப்புக்கு ப்ரூப் பார்த்தவன் அதான் அம்பேத்கர்.  தன்னுடைய மூளையிலிருந்து அரசியல் சாசனத்தை எழுதியதாக எங்கேயும் எழுதி வைக்கலை. கிராமங்களில்,  அக்ரகாரங்களில் பிராமணர்கள் இருக்காங்க என்பான்;  அங்கிட்டு துலுக்கணுங்க இருக்கானுங்க என்பான்;  இங்கு காலணி ஆட்கள் இருக்கிறார்கள் என்று சொல்லுவான். அவனுக்கு பெயர் கூட கிடையாது.  காலணி ஆட்கள் எந்த காலணியில் எவன் ஒட்டிக்கிட்டு வந்தான் எனக்கும் தெரியாது,

tn

 அவங்க எல்லாம் செட்யூல்காஸ்ட் என்று சொல்றோம்.  திருவள்ளுவர் ,திருக்குறள் சொல்லிப்புட்டான்ன்னு சொல்லுறாங்க. திருவள்ளுவர் என்று ஒரு ஆளே கிடையாது, அந்த ஆளு ஒருத்தர் இருந்தாருன்னு சொல்றது கற்பனை. அதைவிட அந்த ஆளு திருக்குறளை எழுதினார் என்று சொல்வது நல்ல கற்பனை என்று மிக இழிவாக பேசியிருந்தார் .இது குறித்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து இன்று காலை ஆர்பிவிஎஸ் மணியன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திநகர் இல்லத்தில் இருந்த அவரை கைது செய்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.