அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு.. தட்டிக்கேட்ட ஆசிரியரிடம் ஆணவப்பேச்சு.. பள்ளிக்கல்வித்துறைக்கு எழும் கண்டனம்..
சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் மோட்டிவேஷனல் ஸ்பீச் சென்கிற பெயரில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்திய சம்பவம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், ஏதேனும் ஒரு துறையில் சாதித்தவர்களை அழைத்துவந்து சிறப்புரையாற்றச் செய்வது வழக்கம். சில நேரங்களில் மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்ஸ் வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கச்செய்வர். ஆனால் அண்மைக்காலமாக பள்ளி, கல்லூரிகளில் ஆன்மீக சொற்பொழிவுகளே அதிகம் நடைபெறுகின்றன. இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில், தற்போது சென்னை அசோக் நகர் பள்ளியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர் மோடிவேஷனல் ஸ்பீச் என்கிற பெயரில், பாவம் , புண்ணியம், மறுபிறவி, மத்திரங்களை படித்தால் நோய் குணமாகும், குருகுலக் கல்வி சிறந்தது என ஆன்மீக சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய அவர், “ஒரு சிலர் கண் இல்லாம பொறக்குறாங்க, வீடில்லாம பொறக்குறாங்க, பல நோய்களோட பொறக்குறாங்க.. இறைவன் கருணையானவர் என்றால் எல்லோரையும் ஒரே மாதிரி படைத்திருக்க வேண்டியது தானே ஏன் படைக்கவில்லை? ஒருத்தன் கோடீஸ்வரனா இருக்கான், ஒருத்தன் ஏழையா இருக்கான்.. ஒருத்தன் கிரிமினலா இருக்கான் ஒருத்தன் நல்லவனா இருக்கான்.. ஏன் இந்த மாற்றங்கள். போன ஜென்மத்தில் நீங்க என்ன செஞ்சீங்களோ அதைப் பொறுத்துதான் இந்த ஜென்மம் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று பேசினார்.
அப்போது குறுக்கிட்ட பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர், இது மாணவர்களுக்கான மோட்டிவேஷனல் பேச்சா அல்லது ஆன்மீக சொற்பொழிவா? மறு பிறவி பற்றி பேசுறீங்க, கர்மா பற்றி பேசுறீங்க” என்று கேட்க, அதற்கு உரத்த குரலில் உங்கள் பெயர் என்ன என்று மகாவிஷ்ணு கேட்கிறார். அத்துடன் “உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் ஏன் என்னை பேச அழைத்தீர்கள், மறுபிறவி, ஆன்மீகம் குறித்து யார் சொல்லித்தருவார்கள். நீங்கள் சொல்லித்தருவீர்களா? ஆன்மிகம் என்றால் என்ன நீங்கள் சொல்லுங்கள்” என விதண்டாவாதமாக ஆசிரியரிடம் அதிகார தோரணையில் பேசுகிறார்.
அரசு பள்ளியில் உள்ளே நுழைந்து மதபோதனை, மந்திரம், மாந்திரீகம், மறுப்பிறவி என சங்கித்தனமாக, பழைய மூட நம்பிகையை பேசுகிறான்..அதை அரசு பள்ளி ஆசிரியர் தவறென்கிறார்.. மூடநம்பிக்கை, ஆன்மீக சொற்பொழிவு கூடாது என்கிறார். ஆனால் உரத்தக் குரலில் அந்த ஆசிரியரை CEO பெயரை பயன்படுத்தி… pic.twitter.com/AvRwR7y9fe
— Surya Born To Win (@Surya_BornToWin) September 5, 2024
தொடர்ந்து அந்த பள்ளி மாணவ மாணவிகளை அந்த ஆசிரியருக்கு எதிராகவே திருப்பி விடுவது போன்றும், அந்த பிள்ளைகள் முன் அந்த ஆசிரியர் தவறானவர் என்று நிருவ முயலும் வகையில் பேசுகிறார். அத்துடன் பள்ளிக் குழந்தைகளும் , சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு சொல்வதை கேட்டு அந்த ஆசிரியரை ஏளனம் செய்கிறார்கள். தொடர்ந்து அங்கிருந்த தலைமை ஆசிரியரும், இன்னும் பிற ஆசிரியர்களும், கேள்வி கேட்ட ஆசிரியரை தான் அடக்க முயலுகிறார்கள். மகாவிஷ்ணு தொடர்ந்து அதிகார தோரணையில் ஆசிரியரை ஏளனம் செய்யும் வகையில் உரத்த குரலில் பேசுகிறார். இந்த முழு சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கடுமையான கண்டனங்களும் எழுந்துள்ளன.
என்ன அநியாயம், என்ன கொடுமை என்று பாருங்கள்!
— Surya Born To Win (@Surya_BornToWin) September 5, 2024
அந்த பள்ளி மாணவ மாணவிகளை அந்த ஆசிரியருக்கு எதிராகவே திருப்பி விடுகிறான்.. அந்த பிள்ளைகள் முன் அந்த ஆசிரியர் தவறானவர் என்று நிருவ முயலுகிறான்.. அந்த குழந்தைகளும் இவன் சொல்வதை கேட்டு அந்த ஆசிரியரை ஏளனம் செய்கிறார்கள்.
சரியான கேள்வி… https://t.co/eK7gXuMDFs pic.twitter.com/h6ssgUuNCE