கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி - பரிசுகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

 
tn

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழாவில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

tn

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (23.8.2023) சென்னை, கோயம்பேடு, தூய தாமஸ் கல்லூரி அரங்கத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழாவில், மாநில அளவில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகைக்கான காசோலைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார்.

govt

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் "தலை நிமிரும் தமிழகம்" என்ற தமிழகத்தின் விடியலுக்கான முழக்கத்தை கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், தமிழகத்திலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளின் மாணவ, மாணவியருக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப்போட்டிகளை நடத்தியது. கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பாடத்திட்டங்களுக்கு அப்பால், மாணவர்கள் அறிந்தும், உணர்ந்தும், தெளிய வேண்டிய உன்னத விழுமியங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கவும், தமிழ் சமூகத்தின் தனித்துவமான பண்பாடுகளை, பெருமைகளை இலக்கியங்களை, கலைகளை, வரலாற்றை மாணவர்கள் அறிந்துகொள்ளும் விதமாகவும், தமிழகத்தின் 38 மாவட்டங்களில் நடத்தப்பட்ட இப்பேச்சுப் போட்டிகளில் 4,000 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.