திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்..!!

 
train

பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 23,24,25 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, மேற்கண்ட தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.20 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு 11.40 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து இரவு 11.55 மணிக்கு ரெயில் புறப்பட்டு அடுத்த நாள் காலை 4.30 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடையும்.

திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.35 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு மதியம் 3 மணிக்கு காட்பாடி சென்றடையும். மறுமார்க்கமாக காட்பாடியில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு 5.30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மற்றொரு சிறப்பு ரெயில் திருவண்ணாமலையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு அதேநாள் இரவு 8 மணிக்கு காட்பாடி சென்றடையும். இந்த ரெயில் காட்பாடியில் இருந்து இரவு 8.55 மணிக்கு புறப்பட்டு 11.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

தாம்பரத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மதியம் 1.30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமார்க்கமாக இந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு அடுத்தநாள் நள்ளிரவு 2.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இதேபோல, திருவண்ணாமலையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 4.20 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். மறுமார்க்கமாக விழுப்புரத்தில் இருந்து 4.35 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

மற்றொரு சிறப்பு ரெயில் திருவண்ணாமலையில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு 7.40 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். மறுமார்க்கமாக இந்த ரெயில் விழுப்புரத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு 9.30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மேலும், விழுப்புரம் -திருவண்ணாமலை இடையிலான சிறப்பு ரெயில் விழுப்புரத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு 11.45 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.