சென்னையில் இருந்து மங்களூரு, கொல்லம், திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரெயில்கள்..!!

 
Q

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கர்நாடக மாநிலம் மங்களூரு சென்டிரலில் இருந்து ஜூலை 13, 20, 27, ஆகஸ்டு 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் திங்கட்கிழமைதோறும் மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06126) மறுநாள் காலை 10.55 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது.

மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 14, 21, 28, ஆகஸ்டு 4, 11, 18, 25, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் செவ்வாய்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06125) மறுநாள் காலை 8.40 மணிக்கு மங்களூரு சென்டிரலை சென்றடையும்.

22 பெட்டிகளை கொண்ட இந்த ரெயில் தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக செல்லும்.

இதேபோல், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து ஆகஸ்டு 12, 19, 26, செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் புதன்கிழமைதோறும் மதியம் 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06119) மறுநாள் காலை 7.20 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து ஆகஸ்டு 13, 20, 27, செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமைதோறும் காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலை வந்தடையும்.

16 ஏ.சி. 3-ம் வகுப்பு பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், தமிழகத்தில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக செல்லும்.

மேலும், திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து ஆகஸ்டு 12, 19, 26, செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் புதன்கிழமைதோறும் மாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06110) மறுநாள் காலை 10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து ஆகஸ்டு 13, 20, 27, செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமைதோறும் மதியம் 2 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06109) மறுநாள் காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரம் சென்டிரலை சென்றடையும்.

22 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், தமிழ்நாட்டில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (9-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.