டி20 கிரிக்கெட் போட்டி : கடற்கரை-வேளச்சேரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

 
train

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு கடற்கரை-வேளச்சேரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட  ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் கடந்த 22ம் தேதி நடைபெற்றது. முதலாவதாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே தடுமாறியது. இறுதியாக அந்த அணி 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பட்லர் 68 ரன்கள் எடுத்தார். 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 12.5 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனிடையே இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று இரவு நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுவதை ஒட்டி கடற்கரை-வேளச்சேரி மற்றும் வேளச்சேரி-கடற்கரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 கிரிக்கெட் முடிந்த பிறகு ரசிகர்கள் திரும்ப ஏதுவாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.