சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு

 
train

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஹூப்பள்ளி-கொல்லை இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Sabarimala Specail Trains: శబరిమల భక్తులకు గుడ్ న్యూస్..ప్రత్యేకంగా 28  రైళ్లు ఏర్పాటు | Sabarimala Special Trains Good news for Sabarimala  devotees 28 special trains arranged

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஹூப்பள்ளி-கொல்லை இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் இருந்து வரும் 28-ந்தேதி முதல் டிசம்பர் 28-ந்தேதி வரையில்(ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில்(வண்டி எண்.07313), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் மதியம் 12.55 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வரும் 29-ந்தேதி முதல் டிசம்பர் 29-ந்தேதி வரையில்(திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஹூப்பள்ளி செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில்(07314), இதே வழித்தடம் வழியாக மறுநாள் மாலை 6.30 மணிக்கு ஹூப்பள்ளி சென்றடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று(வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.