குடியரசு தினத்தை முன்னிட்டு எழும்பூர்-குமரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு அதிவேக ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வருகிற 26ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு அதிவேக ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
குடியரசு தினத்தை ஒட்டி, ஜனவரி 24 அன்று சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு அதிவேக ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்த்துள்ளது. இரவு 10.40க்கு கிளம்பும் ரயில் விழுப்புரம், திருச்சி, மதுரை வழியாக அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு குமரி வந்தடையும். மறுமார்க்கமாக ஞாயிறு அன்று (ஜன.26) இரவு 8.30க்கு கிளம்பி மறுநாள் காலை 8.30க்கு தாம்பரம் வந்தடைகிறது.