கன்னியாகுமரி - மும்பை இடையே சிறப்பு ரயில்..!

 
1

இந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே தென் மாநிலங்களில் தங்கி இருக்கும் வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். ஒரே நேரத்தில் அதிக மக்கள் பயணிப்பதால் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் ஹோலி பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. 

அதாவது கன்னியாகுமரி - மும்பை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி இந்த சிறப்பு ரயில் மும்பையில் இருந்து வருகிற 10 மற்றும் 17-ம் தேதி திங்கட்கிழமைகளில் நள்ளிரவு 12.20 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமைகளில் பகல் 12.15 மணிக்கு கன்னியாகுமரி வந்து சேரும். மறுமார்க்கத்தில் இந்த ரயில், கன்னியாகுமரியில் இருந்து 11-ம் தேதி மற்றும் 18-ம் தேதி ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 2.15 கிழமைகளில் அதிகாலை 4.15 மணிக்கு மும்பை சென்று சேரும்.

இந்த ரயில் தாதர், தானே, கல்யாண், லோனா வாலே, புனே, சோலாப்பூர், கலாபர்கி, வாடி, கிருஷ்ணா, ரெய்ச்சூர், மந்திராலயம் ரோடு, அடோனி, குண்டக் கல், கூட்டி, தாடி பத்திரி, எர்ர குண்ட்லா, கடப்பா, ராஜம் பேட்டா, ரேணி குண்டா, திருத்தணி, காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.