கோடை கால நெரிசலை சமாளிக்க சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரயில்

 
train

கோடைகால நெரிசலை சமாளிக்க சென்னை எழும்பூரில் இருந்து நாளை இரவு 11.50 மணிக்கு சிறப்பு மெமு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோடை விடுமுறையை முன்னிட்டு, எழும்பூர்-நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து இன்று(சனிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் முன்பதிவில்லாத பயணிகள் ரெயில்(வண்டி எண்.06161), மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்து நாளை(ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் முன்பதிவில்லாத பயணிகள் ரெயில்(06162), அதேநாள் இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும் எனக் கூறப்பட்டுள்ளது.