நடிகர் சூர்யாவின் கங்குவா படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி
நடிகர் சூர்யாவின் கங்குவா படத்திற்கு சிறப்புக் காட்சி திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது
தமிழ் திரையில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கும் சூர்யா பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் “கங்குவா” என்னும் திரைப்படத்தில், இதுவரை நடித்திராத வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அண்மையில் கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் வருகிற 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், கங்குவா படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவின் கங்குவா படத்திற்கு சிறப்புக் காட்சி திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. நவ.14ஆம் தேதி படம் வெளியாகும் நாளில் மட்டும் காலை 9 மணி காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறப்புக் காட்சி திரையிட அனுமதி வழங்க படத் தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.