மாநாடு நடந்தே தீரும்... நடிகர் விஜய் செல்வதற்காக பிரத்யேக சாலை அமைப்பு

 
ஜ்

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சேரும் சகதியும் ஆக மாறிய த.வெ.க மாநாட்டு திடலில் சாலை அமைக்கப்பட்டுவருகிறது.


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியக் மாநில மாநாடு வருகின்ற (அக்டோம்பர்) 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெறவுள்ளது. இதற்காக 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 50 அடி அகலம், 200 அடி நீளத்திற்கு மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாநாட்டு திடலில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியுள்ளது. மாநாட்டுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் அவற்றை சீர் செய்வது சாத்தியமா?மாநாடு நடக்குமா? என்ற கேள்வி எழுந்தது.


இந்நிலையில் தவெக மாநாட்டில் பங்கேற்கும் நடிகர் விஜய் செல்வதற்காக பிரத்யேக சாலை அமைக்கப்பட்டுவருகிறது. கூட்ட நெரிசலில் விஜய் சிக்காமல் இருக்க, சுமார் 1.5 கி.மீ தூரத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுவருகிறது. விஜய் நேரடியாக கொடியை ஏற்றிவிட்டு, மாநாட்டுத் திடலுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது. மேலும் விஐபிகள், ஆம்புலன்ஸ் செல்வதற்கென தனி சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.