சென்னையில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று தொடக்கம்!!

 
stalin

மழையினால் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்கும் வகையில் சென்னையில் சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

cm stalin

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததாலும், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.  குறிப்பாக சென்னை மாநகரில் கடந்த 6ஆம் தேதி முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.  இதனால் சென்னை வெள்ளக்காடாக மாறியது.  சாலைகளில் தேங்கிய மழை நீரில் கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

chennai corporation

அந்த வகையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.  இந்த சிறப்பு மருத்துவ முகாம் மூலம் பொதுமக்களுக்கு தேவையான மருந்துகள் உள்ளிட்டவற்றை சுகாதாரத்துறை சார்பில் மாநகராட்சி ஊழியர்கள் வழங்க உள்ளனர். காய்ச்சல் உள்ளதா? என பரிசோதனை செய்வதோடு பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனையும் இந்த சிறப்பு முகாம் மூலம் நடத்தப்படவுள்ளது.