10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள்

 
school

ஏப்ரல் - 2024-ல் நடைபெற்ற 2023-2024-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு (S.S.L.C) பொதுத்தேர்வு முடிவுகள் 10.05.2024 (வெள்ளிக்கிழமை) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதள முகவரியில் அறிந்துக்கொள்ளலாம். 

TN SSLC Result 2020 Declared Tamil Nadu Board Class 10 result Assessment  scheme cancelled SSLC exam dge1.tn.nic.in, dge – India TV

தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in https://results.digilocker.gov.in/ இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம், பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளைஅறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. .

இந்நிலையில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, 13ம் தேதி முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சனிக்கிழமை தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.