ஜன.25ம் முதல் 28ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

 
BUS

நடப்பாண்டிற்கான தைப்பூசம் வரும் ஜனவரி 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதை தொடர்ந்து சனிக்கிழமை , ஞாயிற்றுக்கிழமை என வார இறுதி நாட்கள் வருகிறது.

govt bus

இந்நிலையில் தைப்பூசம், குடியரசு தின விழா மற்றும் வார இறுதி நாட்கள் ஆகிய தொடர் விடுமுறைகளை முன்னிட்டு கோவை மற்றும் அதனைச் சுற்றி உள்ள ஊர்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று கோவை மண்டல போக்குவரத்து மேலாண் இயக்குனர் அறிவித்துள்ளார்.