ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Jul 31, 2024, 19:47 IST1722435427166

ஆடி அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். http://tnstc.in மற்றும் மொபைல் செயலி வழியே தொலைதூர பயணங்களுக்கு முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.