தீபாவளி பண்டிகை - 10,975 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

 
govt bus govt bus

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற நவம்பர் மாதம் 09ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக அரசு சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற நவம்பர் மாதம் 09ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்காக நவம்பர் 09ம் தேதி முதல் 10,975 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் ஊருக்கு செல்ல ஏதுவாக நவம்பர் 13ம் தேதி முதல் மீண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தீபாவளி பண்டிகைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.