வாக்குச்சாவடிகளில் செல்போன்கள் வைக்க பிரத்யேக பை

 
வாக்குச்சாவடிகளில் செல்போன்கள் வைக்க பிரத்யேக பை

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை தொடங்க உள்ளது.

அந்த வகையில் வாக்குச் சாவடிகளில் செல்போன்களை கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரகசிய வாக்கெடுப்பு முறையை பாதுகாக்கும் நோக்கில், வாக்காளர்களின் செல்போன்கள் நுழைவாயிலிலேயே டோக்கன் வழங்கி பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. வாக்குப்பதிவு அறையில் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதைத் தடுப்பதுடன், பணியாளர்களின் கவனம் சிதறாமல் இருக்கவும் இந்த நடவடிக்கை உதவுகிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

வாக்காளர்கள் வாக்களித்து வெளியே வரும் போது டோக்கன் கொடுத்து தங்களின் செல்போன்களை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். முடிந்தவரை செல்போன்களை வீட்டிலேயே வைத்துவிட்டு வருமாறு தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.